கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தேர்வு


கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தேர்வு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தேர்வு வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தங்களது பெயர்களை வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள வலைப்பயிற்சி களத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உரிய படிவத்துடன் ஆதார் கார்டு நகலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் மாரீஸ்வரனை 9443112678 என்ற எண்ணிலும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் சதீஷ்குமாரை 9443978488 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Related Tags :
Next Story