நெல்லை மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
எஸ்.எஸ்.ராஜன் கோப்பை போட்டிக்கான நெல்லை மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு சங்கர்நகரில் 23-ந் தேதி நடக்கிறது
திருநெல்வேலி
தமிழ்நாடு கிரிக்கெட் கழகம் நடத்தும் எஸ்.எஸ்.ராஜன் (டி-20) கோப்பை போட்டிக்கான நெல்லை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி அளவில் சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் வீரர்கள் அசல் பிறப்பு சான்றிதழ், அசல் முகவரி சான்றிதழ் மற்றும் வெள்ளை நிற பேண்ட், டீ சர்ட் அணிந்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 98655 59572, 99658 64452 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story