கிரிக்கெட் வீரர்கள் தேர்வு


கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
x

கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 2 நாட்கள் நடக்கிறது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. வருகிற 22-ந் தேதி அன்று சுழற் பந்து வீச்சாளர்கள் தேர்வும், 23-ந் தேதி வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வும் தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம், கமலம் இண்டர்நேசனல் பள்ளியில் காலை 8 மணியளவில் நடைபெறும். இதில் பங்குபெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றவர்கள் பூர்த்தி செய்து ஆதார் கார்டு நகலினை இணைத்து வருகிற 15-ந் தேதிக்குள் தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், புதிதாக பங்குபெற விரும்புபவர்கள் நேரில் ஆதார் கார்டு நகலுடன் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story