துணை சுகாதார நிலையம் கட்ட நிலம் தேர்வு செய்யும் பணி


துணை சுகாதார நிலையம் கட்ட நிலம் தேர்வு செய்யும் பணி
x

துணை சுகாதார நிலையம் கட்ட நிலம் தேர்வு செய்யும் பணி

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே கூவமூலா கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அல்லது கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. அதற்கு காலதாமதம் ஏற்படுவதால், சில நேரங்களில் உயிரிழப்பு நிகழ்கிறது. இதனால் கூவமூலாவில் துணை சுகாதார நிலையம் கட்டிடத்தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் கூவமூலாவில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் துணை சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு நிலம் தேர்வு செய்ய ஆய்வு பணி, பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், கிராம நிர்வாக உதவியாளர் ராமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story