இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு


இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு
x

நாட்டறம்பள்ளி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்து உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி வருகிறார். அப்போது வீடற்ற 5 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானு நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட அக்ராகரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அக்ராகரம் பகுதியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், கல்லூரி முதல்வர் பூங்கோதை, வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.


Next Story