வீரர்-வீராங்கனைகள் தேர்வு


வீரர்-வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 23 May 2023 12:30 AM IST (Updated: 23 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மாநில எறிபந்து போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு திண்டுக்கல்லில் நடந்தது.

திண்டுக்கல்

மாநில அளவிலான 18-வது சப்-ஜூனியர் எறிபந்து போட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட எறிபந்து அணி பங்கேற்று விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் அணி வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு, திண்டுக்கல் ஏ.கே.வி. வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story