மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு


மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

கடலூர்

கடலூர்

மாநில அளவில் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் நெடுஞ்செழியன், அமீர்ஜான், நடராஜன், அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார். இதையடுத்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சரிபார்க்கப்பட்டதும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் கடலூர் அசோசியேசன் பொருளாளர் பாலமுரளி, இணைச் செயலாளர் சகாய செல்வம், மூத்த விளையாட்டு வீரர்கள் தயாளன், தமிழ்வாணன், முகமது கனி, பொன்பாண்டியன் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story