ஆக்கி விளையாட்டு பயிற்சிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு


ஆக்கி விளையாட்டு பயிற்சிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு
x

ஆக்கி விளையாட்டு பயிற்சிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா திட்ட நிதி உதவியின் தொடக்க நிலை ஆக்கி பயிற்சி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேலோ இந்தியா மையத்தில் குறைந்தது 30 மாணவர்கள், 30 மாணவிகள் பயிற்சியில் சேர்ந்து, அவர்களை மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச மற்றும் பன்னாட்டு அளவு மற்றும் ஒலிம்பிக் அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ஆக்கி விளையாட்டு பயிற்சியில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அரசு, தனியார் பள்ளி மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் மாணவரல்லாத விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை நடைபெற உள்ள தேர்வில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அதிக அளவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனினை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story