தூத்துக்குடியில்புத்தக திருவிழாவுக்கு இடம் தேர்வு


தூத்துக்குடியில்புத்தக திருவிழாவுக்கு இடம் தேர்வு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்புத்தக திருவிழாவுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழா வருகிற 21-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவுக்கான இடம் தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்த வந்தன. இந்த நிலையில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி மெயின் ரோட்டில் உள்ள இடத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த இடத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த பகுதியில் அரங்குகள் அமைப்பது தொடர்பாகவும் கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story