தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி
தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நகர்ப்புற வட்டாரத்திலுள்ள பள்ளிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்காப்பு கலைப்பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தூத்துக்குடி நகர்ப்புற வட்டாரத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி சண்முகபுரம் நடுநலைப்பள்ளியில் "பெண் கல்வி" என்ற தலைப்பில் 6,7,8 -ம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்ட பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் ரூபி தற்காப்பு கலையில் பயிற்சி அளித்தார்.
தனியாக செல்லும்போது...
அப்போது, மாணவிகள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் பயிற்சி, வீட்டிலிருந்து மற்றொரு இடத்துக்கு தனியாக செல்லும் போது, தான் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு தனியாக நடந்து செல்லும் போது, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதம், எதிரி தன்னை தாக்க முற்படும் பொழுது தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதம் போன்ற தலைப்புகளில் தற்காப்பு கலை பயிற்சி கருத்துக்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் 22 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.