உழவர் சந்தையில் 30 டன் காய்கறிகள் விற்பனை


உழவர் சந்தையில் 30 டன் காய்கறிகள் விற்பனை
x

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி 30 டன் காய்கறிகள் விற்பனையானது.

நாமக்கல்

உழவர்சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இங்கு காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி 30 டன் காய்கறிகள் மற்றும் 7¾ டன் பழங்கள் என மொத்தம் 37 ¾ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 980-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 7,480 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.40-க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.32-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.50-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.66-க்கும், கேரட் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.32-க்கும், இஞ்சி கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் வரத்து நேற்று அதிகமாக இருந்ததால், அவற்றின் விலை சற்று குறைந்தே காணப்பட்டதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story