கஞ்சா விற்ற தந்தை-மகன் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்ற  தந்தை-மகன் குண்டர் சட்டத்தில் கைது
x

கஞ்சா விற்ற தந்தை-மகனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

தேனி

மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 49). இவரது மகன் வைஷ்ணவ்குமார் (22). கடந்த 8-ந்தேதி இவர்கள் இருவரையும் கஞ்சா விற்றதாக மயிலாடும்பாறை போலீசார் கைது செய்து தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டா் முரளிதரன், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் தந்தை-மகன் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்


Next Story