போதை மாத்திரை விற்ற மருந்தக ஊழியர் கைது
தூத்துக்குடியில் போதை மாத்திரை விற்ற மருந்தக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் போதை மாத்திரை விற்ற மருந்தக ஊழியரை போலீசார் அதிரடியாக ைகது செய்தனர்.
ரோந்து
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அபபோது, தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மருந்தக ஊழியர் கைது
விசாரணையில், அவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் ரூபன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவர் ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் போதை தரக்கூடிய சில மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் ரூபனை கைது செய்தனர். அவரிடம் ருந்து 15 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.