ரூ.12 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை


ரூ.12 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
x

கே.வி.குப்பம் சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடந்துவருகிறது. இந்த சந்தையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஆட்டுக்குட்டிகள், வளர்ந்த ஆடுகள் என பல்வேறு எடைகளில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் போன்றவை விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இங்கு எதிர்பார்த்த ஆடுகள், எதிர்பார்த்த விலையில் கிடைப்பதால், அதிகப்படியான வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இதனால் பல்வேறு வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும், தங்கள் ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்து ஆட்டுச் சந்தையில் இறக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தற்போது சித்திரை விழா தொடங்கி, பல்வேறு இடங்களில் அம்மன் திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன. நேர்த்திக் கடனுக்குத் தேவையான கருப்பு நிற வெள்ளாடுகள், இங்கு அதிகம் கொண்டுவரப்படுகின்றன. இதனால் ஆடுகள் விற்பனை, முந்தைய வாரங்களை விட, அதிகரித்தபடி உள்ளன. ஆடுகளின் நிறம், தரம், வயது போன்றவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சுமார் 450 ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு ஆட்டின்விலை ரூ.8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது என்றும், இந்த வார சந்தையில் சுமார் ரூ.12 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.


Next Story