புகையிலை பொருட்கள் விற்பனை செய்த5 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
கும்பகோணம், சுவாமிமலை, பட்டீஸ்வரத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம், சுவாமிமலை, பட்டீஸ்வரத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திடீர் ஆய்வு
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் மற்றும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கும்பகோணம், சுவாமிமலை,பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென ஆய்வு நடத்தினர்.
5 கடைகளுக்கு சீல் வைப்பு
இந்த ஆய்வில் கும்பகோணத்தில் 3 கடைகளிலும், சுவாமிமலையில் உள்ள ஒரு கடையிலும், பட்டீஸ்வரத்தில் 2 கடைகளிலும், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.
கடும் நடவடிக்கை
மேலும் இதுபோன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.