அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்


அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 21 Jan 2023 4:36 PM IST (Updated: 21 Jan 2023 8:29 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

எனவே 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்களது பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடங்கலாம்.

மேலும் தாராள மனம் படைந்த மக்கள் ரூ.250 நிதியாக அளித்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு பெண் குழந்தைக்கு தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிட்ட திட்ட கணக்கை தொடங்கி கொடுக்கலாம்.

பொதுமக்கள் வழங்கும் ரூ.250 ஆனது ஒரு பெண் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு தொடக்க ஒளியாய் அமையும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 தொகையாக செலுத்தி கணக்கு தொடங்கலாம்.

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் செலுத்தலாம். பெண் குழந்தைகளின் மேற்படிப்பிற்காக சேமிப்பில் இருந்து 50 சதவீதம் முன்பணம் பெறலாம். தேவை ஏற்படின் திருமணத்தின் போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்துள்ளார்.


Next Story