செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 13 Feb 2023 11:07 PM IST (Updated: 13 Feb 2023 11:07 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் நடுப்பட்டியில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு செல்வமாரியம்மன், கற்பக விநாயகர், செல்வவிநாயகர் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோவிலை வலம் வந்து யாக சாலையில் வைத்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்துபூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து செல்வமாரியம்மன், கற்பக விநாயகர், செல்வவிநாயகர் ஆலய கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி செல்வ மாரியம்மனுக்கு 108 வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story