செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முண்டியம்பாக்கம் செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள செல்வ வினாயகர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி ஆகிய கோவில்கள் ஆலை நிர்வாகத்தினரால் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து கும்பாபிஷேக விழா 5-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு 3-வது கால யாக பூஜை, பூர்ணா ஹூதி முடிவடைந்ததை அடுத்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் புறப்பட்டு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனரும், அறங்காவலர் ராஜ் ஸ்ரீபதி தலைமையில் பனையபுரம் அருள் குருக்கள் வினாயகர் கோவில் கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மற்ற கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்க்கரை ஆலை தலைவர் சத்தியமூர்த்தி, மூத்த உதவி தலைவர் ரமேஷ், உதவி தலைவர் கதிரவன், மூத்த துணை பொது மேலாளர் திருஞானம், முதுநிலை மேலாளர் சிவாஜிகணேசன், பொறியாளர் சத்தியவேணி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன், ஆலை அதிகாரிகள், ஊழியர்கள், கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.