செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா


செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x

செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

ராமநாதபுரம்

தொண்டி

தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாட்சி தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து பறவை காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நம்புதாளைக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு முளை கொட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று செல்வமுத்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story