கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா போலீஸ் நிலைய அதிகாரிகளால் குழந்தை திருமண தடுப்பு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் மகளிர் இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் கொம்பையா பாண்டியன், மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராம் ஹரி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story