பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம்
பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மற்றும் பாரதி புத்தகலாயம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பழ.சபாரெத்தினம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர் சிவானந்தம் வரவேற்றார். சங்கத்தை சேர்ந்த அரிய முத்து பாடல்கள் பாடினார். பாரதி புத்தகலாயம் ஜீவானந்தம் நோக்க உரை நிகழ்த்தினார். அழகப்பா அரசு கலை கல்லூரியை சேர்ந்த மோகன் தொடக்க உரையாற்றினார். ராமசாமி தமிழ் கல்லூரி பேராசிரியர் நாகநாதன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன் விளக்கி பேசினார். முடிவில் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ராஜீ நன்றி கூறினார்.
Related Tags :
Next Story