மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக வரலாற்று துறையின் சார்பாக தமிழ்நாடு பண்பாட்டு பாரம்பரியம் சிவகங்கை ஒரு சிறப்பு பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கு கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது.
வரலாற்று துறைத்தலைவர் கலைச்செல்வி வரவேற்று பேசினார். கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் அழகுச்சாமி, சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, மதுரை காமராஜர் பல்கலைக்கழக கலை வரலாற்று துறையின் முன்னாள் தலைவர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை வாசித்தனர். இதற்கான நிகழ்வுகளை கண்ணன் ஒருங்கிணைத்தார்.
Related Tags :
Next Story