கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி

சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகள் மதுரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி வசதி அலுவலகம் இணைந்து தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் வங்கி கடன் உதவிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை உரையாற்றினார். சுயநிதி பாட பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ்கான் வாழ்த்துரை வழங்கினார். மதுரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி மற்றும் வசதி அலுவலக உதவி இயக்குனர் உமா சந்திரிகா, புள்ளியியல் ஆய்வாளர் ராஜேஷ், சிவகங்கை டான்சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, உதவி இயக்குனர் அன்புச்செழியன், பெண் தொழில் முனைவோர்கள் கீதா, லதா, ஆதித்யா பள்ளி நிறுவனத்தை சார்ந்த செல்வ சுந்தர்ராஜன் ஆகியோர் பேசினர். இதில், ஆட்சி குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story