மகளிர் தின கருத்தரங்கம்


மகளிர் தின கருத்தரங்கம்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் சிவகங்கையில் நடைபெற்றது.

சிவகங்கை


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் சிவகங்கையில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாவட்டச் செயலர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சுரேஷ் வரவேற்றார். தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் வாசுகி, தமிழ்நாடு கலை இலக்கியச்சங்கத்தின் மாநிலச்செயலர் செல்வக்குமார், தமிழக தமிழாசிரியர் முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் இளங்கோ, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க முத்துராமலிங்கம், தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் கார்த்திக், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலர் மிக்கேலம்மாள், தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் துறை உயர்நிலை அலுவலர்கள், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பானுமதி நன்றி கூறினார்.


Next Story