திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களின் நலனில் வங்கியின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு திருச்செந்தூர் இந்தியன் வங்கி சார்பில் நடந்தது.
கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை இந்தியன் வங்கி மண்டல அலுவலக தலைமை அதிகாரி சுஜா கலந்து கொண்டு, மாணவர்கள் எவ்வாறு வங்கி கணக்கை தொடங்க வேண்டும், கல்விக்கடன் பெறுவது எப்படி, இணையவழியில் கட்டணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து எடுத்து கூறினார்.
விழாவில் திருச்செந்தூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் மாரிமுத்து, உதவி மேலாளர் ராஜா, நெல்லை இந்தியன் வங்கி தலைமை மேலாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நான்சி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story