மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் கருத்தரங்கு


மயிலம்  தமிழ் கலைக்கல்லூரியில் கருத்தரங்கு
x

மயிலம் அருகே தமிழ் கலைக்கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.

விழுப்புரம்

மயிலம்,

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன், முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தார். கணிதவியல் துறை துணை பேராசிரியர் தம்பிராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக டென்மார்க் மார்ஸ்க் டேங்கர்ஸ் தலைமை கடல்சார் பொறியாளர் மகேந்திரவர்மா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகள் பெற கணிதத்தின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என கருத்துரை வழங்கி பேசினார். இதில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாபு, தியாகராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story