விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கம்


விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கம்
x

திருவவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கமூட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில் 'தொழிற்சாலைகளில் பொறியாளர்களின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலையை அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள ஆவின் பால் மற்றும் பவுடர் ஆலையின் பராமரிப்பு பொறியாளர் கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், ''தற்போது உள்ள சூழலில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எனவே மாணவர்கள் இத்தகைய தொழில் நுட்ப கல்வியை பயில முன்வருவது வரவேற்கத் தக்கது. நவீன தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ளும் போது மிகச்சிறப்பான எந்திரங்களை வடிவமைப்பது, இயக்குவது மற்றும் பயன்படுத்துவது மிகவும் சுலபமான ஒன்றாக மாறும். அதனை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தவும் முடியும். மாணவர்கள் தங்கள் தேர்ந்தெடுத்து உள்ள துறையில் சிறந்து விளங்க படிக்கும் போதே அனைத்து தொழில் நுட்பங்களின் நுணுக்கங்களையும் கற்றறிதல் வேண்டும்.

செய்முறை பயிற்சிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஏற்படும் சந்தேகங்களை எந்தவித தயக்கமுமின்றி ஆசிரியர்களிடம் கேட்டறிவது மிகவும் சிறந்த ஒன்றாகும். நம் எதிரில் உள்ள சவால்கள் எவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப தீர்வினை எவ்வாறு காண்பது என்பதையும் மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலில், ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றி வாழ கற்றுக்கொண்டால் நம் வாழ்க்கையில் எந்த உயரத்தையும் அடைய முடியும்'' என்றார். கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் டி.சர்வேசன் வாழ்த்துரை வழங்கினார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் டி.பாபு வரவேற்றார். கருத்தரங்கின் நிறைவாக எந்திரவியல் விரிவுரையாளர் குமரன் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் ராஜா மற்றும் சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story