குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம்


குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம்
x

குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. டி.ஐ.ஜி. கலந்துகொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் முன்னிலை வகித்தார்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது, அதை சார்ந்த சட்டங்கள், வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வது, குற்றம் நடக்காமல் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர். முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு எஸ்.புஷ்பராஜ் நன்றி கூறினார்.


Next Story