பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு


பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடி

வல்லநாடு:

வல்லநாடு அருகே துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் முகம்மது தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் ஹீமாயூன் கபீர், துணைத்தலைவர் இஜாஜ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் மூத்த நிலைக்குழு வக்கீல் கோபிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story