பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
உலகங்காத்தான் கிராமத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் வேளாண்மை அதிகாரி வேல்விழி பங்கேற்பு
தியாகதுருகம்
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் உலகங்காத்தான் இயற்கை விவசாய சங்கம் சார்பில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் மாவட்ட வேளாண்மை அதிகாரி வேல்விழி தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க கவுரவ தலைவர் தங்கவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஜயராகவன், நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை விவசாயி வேலு மாலா வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய தலைவர் அசோகன், ஒருங்கிணைப்பாளர் ராஜி, செயற்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினர். தொடர்ந்து மாவட்ட வேளாண்மை அதிகாரி வேல்விழி இயற்கை விவசாயிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் பற்றி கூறினார். கருத்தரங்கில் விவசாய சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, இளையராஜா, செந்தில், திருவேங்கடம், ராஜா, ஜெயவேல் மற்றும் இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி இளங்கோ நன்றி கூறினார்.