நீலகிரியில் அரசு பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் லாரிகளில் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. இதற்காக கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாடப்புத்தக பார்சல்கள் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து லாரிகளில் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து கல்வி அலுவலக தரப்பில் கூறும்போது, புதிய கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்காக பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story