செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில்குறுமைய அளவிலான செஸ் போட்டி
செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் குறுமைய அளவிலான செஸ் போட்டி நடந்தது
ஈரோடு கிழக்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி, ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் வி.வி.சி.ஆர். செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உடற்கல்வி துணை ஆய்வாளர் சாலமன், பள்ளிக்கூட செயலாளர் எஸ்.சிவாந்தன், செங்குந்தர் கல்விக்கழக பொருளாளர் சி.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் எஸ்.வேலுமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் குமார், செல்வக்குமார், மோகனசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். குறுமைய அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகள் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.