செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் கடியாபட்டி அருகே ஊனையூரில் செந்தாமரைக் கண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள செந்தாமரைக்கண்ணன் பெருமாள் வெங்கடாசலபதி தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலில் திருப்பணிகள் கடியாபட்டி விஸ்வநாதபுரம் மல்லுபட்டி வகையறா நா.லெ குடும்பத்தார்களால் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முன்னதாக 3-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 1, 2, 3, 4 என நான்கு கால பூைஜ நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செந்தாமரைக்கண்ணன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான நகரத்தார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story