பனியன் நிறுவன தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை


பனியன் நிறுவன தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை
x

பனியன் நிறுவன தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை

திருப்பூர்

திருப்பூர்,

தாராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

திருப்பூரை அடுத்த கொடுவாய் தெற்கு அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தார்.

இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

25 ஆண்டு சிறை

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட குணசேகரனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறந்த முறையில் சாட்சியை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பெண் காவலர் கவுதமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.


Next Story