தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்


தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்
x
தினத்தந்தி 29 Jun 2023 7:39 PM IST (Updated: 29 Jun 2023 7:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தற்போது அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளார் செந்தில்பாலாஜி என குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ளும் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story