வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணியை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கண் மருத்துவர் பர்ஹான், அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இறந்தவரின் கண்களை அகற்றி மற்றொருவருக்கு பொருத்த நடவடிக்கை எடுத்ததை பாராட்டி, அந்த டாக்டருக்கு, எம்.எள்.ஏ. பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தலைமை மருத்துவர் அம்பிகா சண்முகம், டாக்டர்கள் செந்தில் குமார், சிந்து, கணேஷ், சுப்பிரமணி, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர். ஆகியோர் இருந்தனர்.