அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் கட்டிட பணிகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் கட்டிட பணிகள்  செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
x

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் நடைபெறும் கட்டிட பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் நடைபெறும் கட்டிட பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

வாணியம்பாடியை அடுத்த வேப்பமர சாலை என்ற இடத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அரசினர் தொழிற் பயிற்சி நிலைய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இருப்பினும் அந்த கட்டிடத்தில் இன்னும் வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், தற்போது அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வகமும், தொழில் பழகுனருக்கான பயிற்சி பொருட்கள் வைப்பதற்கு கட்டிடமும் கட்ட ரூ.3¼ கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

அந்த இடத்தை நேற்று வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிதாசன், செல்வராஜ் உள்பட பலர் இருந்தனர்.

Next Story