பழுதடைந்த சாலை, கால்வாய்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலை, கால்வாய்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் நேற்று பெய்த மழையின் காரணமாக பழுதடைந்த சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் முதல் கட்டமாக 34, 35, 36 ஆகிய வார்டுகளில் வீதி, வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பழுதடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வின் போது நகர செயலாளர் சதாசிவம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜாகிர் அகமது, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் தன்ராஜ், காதர்பேட்டை கோவிந்தன், நியூடவுன் சங்கர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், பாரதிதாசன், உதயேந்திரம் பேரூர் செயலாளர் சரவணன், பிரவீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.