செந்துறை ஒன்றியக்குழு கூட்டம்


செந்துறை ஒன்றியக்குழு கூட்டம்
x

செந்துறையில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்கான ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி சாமிதுரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணிவேலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக செந்துறை ஒன்றியத்தில் நடைபெற்ற வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.


Next Story