பவானி காலிங்கராயன்பாளையத்தில் தொடர் சம்பவம் மளிகை, டீக்கடை பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பவானி காலிங்கராயன்பாளையத்தில் தொடர் சம்பவம்  மளிகை, டீக்கடை பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு;  கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பவானி காலிங்கராயன்பாளையத்தில் மளிகை, டீக்கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

பவானி

பவானி காலிங்கராயன்பாளையத்தில் மளிகை, டீக்கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மளிகை கடையில் திருட்டு

பவானி அருகே காலிங்கராயன்பாளையம் பகுதியில் மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை அதன் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கிருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் சோப்பு, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. இதுபற்றி அவர் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

டீக்கடை

இதேபோல் காலிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின்னர் கடையில் இருந்து ரூ.7ஆயிரம், சோப்பு, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை திருடுவதும், அதன்பின்னர் அவற்றை கடையிலிருந்த பையில் போட்டுக்கொண்டு சாதாரணமாக வெளியே நடந்து சென்றதும் பதிவாகியிருந்தது.

மேலும் காலிங்கராயன்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடைக்குள் மர்மநபர் ஒருவர் புகுந்து அங்கு பணப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டு்களை திருடிவிட்டு வெளியே வருவதும், பின்னர் அருகே உள்ள கடைகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்துவிட்டு செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஏமாற்றம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலிங்கராயன்பாளையம் பவானி மெயின் ரோட்டின் வளைவில் உள்ள பிரபல இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அதில் பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

மேலும் காலிங்கராயன்பாளையம், லட்சுமிநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வருவதும், அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி கேட்பது போல் நடித்து கடைக்காரர்களிடம் இருந்து செல்போன், பணத்தை நைசாக அபேஸ் செய்துவிட்டு தப்பித்து செல்வதும் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

காலிங்கராயன்பாளையத்தில் நடந்த இந்த தொடர் திருட்டு சம்பவம், திருட்டு முயற்சி கடைக்காரர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான குற்றவாளிகளின் உருவங்களை வைத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story