சூளகிரி அருகேகார் மீது லாரி மோதி 5 பேர் படுகாயம்


சூளகிரி அருகேகார் மீது லாரி மோதி 5 பேர் படுகாயம்
x

சூளகிரி அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் கார் ஒன்று பெங்களூருவுக்கு சென்று கொண்டு இருந்தது. சூளகிரியில் பவர் கிரீட் அருகே வந்த போது அந்த வழியாக சென்ற ஒரு லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story