வேன்-கார் மோதல்; 5 பேர் படுகாயம்
குருபரப்பள்ளி அருகே வேன்-கார் மோதல்; 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலவங்கா அருகே உள்ள பெல்லஅள்ளியை சேர்ந்தவர் தன்யா (வயது 20). இவர் காரில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (24), ரியா (15), ஷாருலதா (52), வாசுமதி (50) ஆகியோருடன் வந்து கொண்டு இருந்தார். இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தனர். குருபரப்பள்ளி அருகே வந்த போது அந்த வழியாக வந்த வேன், கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த தன்யா உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தன்யா கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.