சேவை குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4.22 லட்சம் வழங்க வேண்டும்


சேவை குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4.22 லட்சம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4.22 லட்சம் வழங்க வேண்டும்காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4.22 லட்சம் வழங்க வேண்டும்காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

குமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் தனது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்திருந்தார். எதிர்பாராத விதமாக அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதமாகி விட்டது. வாகனத்தை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்திருந்தார். இதன் பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலவு செய்த தொகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை. உடனடியாக இவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ராஜேஸ் கண்ணனுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 208, நஷ்ட ஈடு ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 208-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story