திருப்பரங்குன்றத்தில் ரெயில்வே மேம்பால பகுதியில் சேவை ரோடு- 12 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்டது


திருப்பரங்குன்றத்தில் ரெயில்வே மேம்பால பகுதியில் சேவை ரோடு- 12 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்டது
x

திருப்பரங்குன்றத்தில் ரெயில்வே மேம்பால பகுதியில் சேவை ரோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்டது.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 2011-ம் ஆண்டில் சுமார் ரூ.22 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கீழ் பகுதியின் இருபுறமும் சர்வீஸ் ரோடு(சேவை ரோடு) அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் ஒரு பகுதி மட்டும் சர்வீஸ் ரோடு போடப்பட்டது. மற்றொரு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. பாலத்தின் கீழ்பகுதியின் இடமானது 24 பேருக்கு உரியதாகும். அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் சர்வீஸ் ரோடு போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக முதற்கட்டமாக அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து நகருக்குள் அந்த ரோட்டில் வாகனங்கள் சென்று வந்தன. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் அந்த பகுதியில் குறையும் என வாகன ஓட்டிகள் கூறினர்.


Related Tags :
Next Story