சேஷாத்ரி சுவாமிகள் அதிர்ஷ்டான கும்பாபிஷேகம்:ஊஞ்சலூரில் தற்காலிகமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும்


சேஷாத்ரி சுவாமிகள் அதிர்ஷ்டான கும்பாபிஷேகம்:ஊஞ்சலூரில் தற்காலிகமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும்
x

சேஷாத்ரி சுவாமிகள் அதிர்ஷ்டான கும்பாபிஷேகத்தையொட்டி ஊஞ்சலூரில் தற்காலிகமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

ஊஞ்சலூரில் சேஷாத்ரி சுவாமிகள் அதிர்ஷ்டானம் உள்ளது. இந்த கோவிலில் சில நாட்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இதனால் ஊஞ்சலூர் ரெயில்நிலையத்தில் 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 6 நாட்கள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 1 நிமிடம் நின்று செல்லும்.

அதன்படி 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ரெயில் எண் 16232 மைசூரு-மயிலாடுதுறை விரைவு ரெயில் நள்ளிரவு 1.26 மணிக்கும், ரெயில் எண் 16236 மைசூரு-தூத்துக்குடி விரைவு ரெயில் அதிகாலை 3.59 மணிக்கும், ரெயில் எண் 16159 சென்னை எழும்பூர்-மங்களூரு விரைவு ரெயில் காலை 7.09 மணிக்கும் நின்று செல்லும்.

மேலும் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை ரெயில் எண் 16322 கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் காலை 10.30 மணிக்கும், ரெயில் எண் 16844 பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரெயில் காலை 10.59 மணிக்கும், ரெயில் எண் 16843 திருச்சி-பாலக்காடு டவுன் விரைவு ரெயில் மாலை 3.10 மணிக்கும், ரெயில் எண் 16321 நாகர்கோவில்-கோவை விரைவு ரெயில் மாலை 3.34 மணிக்கும், ரெயில் எண் 16160 மங்களூர்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில் மாலை 6.23 மணிக்கும், ரெயில் எண் 16231 மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரெயில் இரவு 10.20 மணிக்கும், ரெயில் எண் 16235 தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் இரவு 11 மணிக்கும் ஊஞ்சலூா் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவல் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story