சேஷாவெங்கட் இல்ல திருமண விழா


சேஷாவெங்கட் இல்ல திருமண விழா
x

வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட் இல்ல திருமண விழா நடந்தது.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை ஒன்றியக்குழு தலைவரும், வாலாஜா மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேஷாவெங்கட்- ஜீவலட்சுமி தம்பதியினர் மகள் ரோஷிணிக்கும், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை ரவி நாயுடு- சசிகலா தம்பதியரின் குமாரன் தீபக் என்பவருக்கும் அரப்பாக்கம் வி.ஏ.பி. ரமணி சங்கர் மஹாலில் திருமண விழா நடந்தது.

திருமணம் மற்றும் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, விஸ்வாஸ் பள்ளி தலைவர் கமலாகாந்தி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி,

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ., வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன், நல்லதம்பி, வில்வநாதன், அமலுவிஜயன், ஜி.கே.கல்வி குழும இயக்குனர் சந்தோஷ்காந்தி, தாம்பரம் துணை மேயர் காமராஜ், காட்பாடி துரைசிங்காரம், வேலூர் மேயர் சுஜாதா, தொழிலதிபர் பி.ஆர்.சி.ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் திருப்பத்தூர் சூரியகுமார், ராணிப்பேட்டை ஜெயந்தி திருமூர்த்தி, வேலூர் பாபு, துணைத்தலைவர் நாகராஜ, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம் துரைமஸ்தான், குமுதா, ஏவி.சாரதி, வேலூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அரசு, பாண்டியன், மலர்விழி, லோகநாதன், நரசிம்மன், வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், மோகன், சம்பத்குமார், சாந்தி சீனிவாசன், ஜோதிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், கண்ணையன், அசோகன், கலைமணி, ஏழுமலை, ஆறுமுகம், சுந்தரவடிவேல், விஜயகுமார், ராஜமாணிக்கம், சத்தியமூர்த்தி, அசோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்மலா, வடிவேலு, அசோக், புருஷோத்தமன், ரமேஷ், கலைக்குமார், திவ்யா பூங்கொடி, புவனேஸ்வரி, அனிதா கஜேந்திரன், முனியம்மாள் கணேசன், ஸ்ரீமதி நந்தகுமார், வாலாஜா ஊராட்சி துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், யூனியன் அலுவலக அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களின் பெற்றோர் சேஷா வெங்கட் ஜீவலட்சுமி, ரவி நாயுடு, சசிகலா மற்றும் நாகராஜ் நிர்மலா, செந்தில்குமார் சுஜாதா, தம்பதியினர் துரைவெங்கட், ஜெயா அம்மாள், சந்திரசேகரன் சரஸ்வதி, செல்வம் ஹேமலதா, வீரமணி ராதா, இளங்கோவன் நிர்மலா, தம்பிதுரை கவிதா, செந்தில்குமார் அனுசுயா தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண வாழ்த்து செய்தியை சேஷா வெங்கட்டுக்கு அனுப்பி இருந்தார்.


Next Story