மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் வேேராடு சாய்ந்த மரம்
மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் வேேராடு சாய்ந்த மரம்
அருள்புரம்மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் வேேராடு சாய்ந்த மரம்
மரம் என்ற வார்த்தை சாதாரணமானது அல்ல. அது மானுட சமூகத்தின் ஆதார வளர்ச்சிக்கு அடிநாதம்.. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ளவர்கள் வரை அடைக்கலம் கொடுக்கும் கற்பகத்தரு. பிரிதொன்றை எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் கருணையின் கொடை. மரத்தின் நிழலில் இளைப்பாறாத மனிதர் இல்லை. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வோடு இரண்டர கலந்தது. நித்தம் நித்தம் மாறிவரும் உலகில் வளர்ச்சி என்ற மோகவலையில் சிக்கி இயற்கை மட்டுமல்ல இயற்கையின் வனப்பான மரத்தையும் கோடறி கொண்டு கொடுங்கரங்களால் வெட்டுவது குறையவில்லை. மரம் குறைந்தால் மரத்திற்கு ஒரு பாதிப்பு இல்லை. ஆனால் அது மனித இனத்தின் அழிவின் தொடக்கநிலை. எதுவும் நிலை குலைந்தால்.... பழங்கால மரங்களை பாராமரிக்காததால் அவை படிப்படியாக அழிந்து அழிந்து வருகிறது. அப்படி ஒரு மரம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையத்தில் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் காவல்துறை ஆணையர் அலுவலகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவில் நிலத்தை சுற்றியிருந்த கம்பி வேலி அகற்றப்பட்டு மரங்கள் நடுவதற்கு குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி நடக்கவில்லை. கோவில் நிலம் பாதுகாப்புபற்ற நிலையில் இருப்பதால் அங்கு மது அருந்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் நிலத்தில் இருந்த 25 ஆண்டு பழமையான பூவரச மரம் வேர்பகுதி முழுவதும் தீப்பிடித்து சாய்ந்து விட்டது. இதற்கு மர்ம ஆசாமிகள் தீவைத்துள்ளனர். மேலும் கோவில் நிலத்தில் உள்ள புற்கள் எல்லாம் கருகி விட்டன. எனவே கலெக்டர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மரம் வேரோடு சாய்ந்ததால் அந்த மரத்தில் கூடு கட்டியிருந்த பறவைகள் கூடுஇல்லாமல் அங்கும் இ்ங்கும் பறந்து தவியாய் தவித்தது. பின்னர் பறவைகள் வேறு பகுதிக்கு பறந்து சென்று விட்டன.