மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு


மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
x

மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). இவர் காற்றாலை பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வீட்டிற்கு எதிரில் அவரது மோட்டார் சைக்கிளையும், அவரது சகோதரர் ராஜாவின் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதை கண்ட ராமசாமி அதிர்ச்சியடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இ்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story