மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு


மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
x

தேனி அருகே, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வர்க்கீஸ். அவருடைய மனைவி மின்னல்கொடி (வயது 39). முன்விரோதம் காரணமாக இவருடைய வீட்டில் சிலர் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு, மின்னல்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மின்னல்கொடி புகார் செய்தார். அதன்பேரில், அதே ஊரை சேர்ந்த அருண், பரமேஸ்வரி உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story