மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:07 AM IST (Updated: 21 Dec 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்துகிருஷ்ணன், அரசு வக்கீல்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உரிய நில உரிமையாளர்களுக்கு பட்டா மாற்றி வழங்கப்பட்டது. இதன் மூலம் நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், அந்தந்த பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதிமன்றம் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஜெயங்கொண்டம் அனல் மின் திட்ட தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார்.


Next Story